Our Feeds


Monday, November 28, 2022

News Editor

கெமரூனில் மண்சரிவு : 14 பேர் உயிரிழப்பு


 

கெமரூன் நாட்டின் தலைநகர் யவுண்டேவில் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மண்சுவர் இடிந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆபிரிக்காவில் உள்ள கெமரூன் நாட்டின் தலைநகர் யவுண்டேவில், கடும்மழை காரணமாக இந்த ஆண்டு பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் அந்நகரின் உள்கட்டமைப்பு சிதைந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள 20 மீட்டர் உயரமுள்ள அணைகட்டுப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்பகுதி மக்கள் அதில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது மண்சரிவு ஏற்பட்டு மண்சுவர் அவர்கள் மேல் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி ஆளுநர் நசெரி பால் தெரிவித்துள்ளார். மீட்பு படையினரின் உதவியுடன் மண்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »