நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற கொள்கலன் லொறியொன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
கோகி மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கொள்கலன் லொறி, வீதியின் குறுக்கே வந்த காரின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதி வெடித்து சிதறியது.
இதில் வீதியில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின.
இந்த கோர விபத்தில் 12 பேர் உடல்கருகி உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.