Our Feeds


Sunday, November 13, 2022

News Editor

11 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது


 

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்காள விரிகுடா கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் 2 மீன்பிடி படகுகளில் சென்ற மீனவர்களை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காக்கிநாடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய கடற்றொழில் திணைக்களத்தினால் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் அல்லது விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »