அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவிசாவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபா தண்டப் பணத்தை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேவேளை, அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையை மீறி, முட்டைகளை விற்பனை செய்த அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு வர்த்தகர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபா தண்டப் பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.