இலங்கை அரசாங்கம் தனது செயற்பாடுகளை நடத்துவதற்கு, சர்வதேசத்திடம் நாளொன்றுக்கு 1,050 கோடி ரூபா கடனை பெறவேண்டியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
இந்த ஆண்டு அரசின் வருமானம் 653 கோடி என்றும், அரசின் செலவு 1,705 கோடி என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி அடுத்த ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 950 கோடி ரூபாவாக இருக்கும் என தெரிவித்த பேராசிரியர் அத்துகோரள, அடுத்த வருடத்தில் அரசாங்கத்தின் செலவு 2,160 கோடி ரூபாவாக அதிகரிக்குமெனவும் தெரிவித்தார்.
வரி அதிகரிப்பால் அடுத்த ஆண்டு அரசின் வருமானம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டார்.