நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய சுமார் 10,000 தொழில்நுட்ப பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை கணினிச் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் இருப்பில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வருடாந்தம் சுமார் 20,000 நிபுணர்கள் தேவைப்படுவதாகவும், அவர்களில் 50 சத வீதமானவர்களை மட்டுமே பெறக் கூடியதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்