கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து திருடிய சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், திருட்டுச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசி, நினைவுப் பரிசு, தாய்லாந்து மற்றும் இலங்கை நாணயத்தாள்கள் என்பன உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.