ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி
மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உண்டு என்பது இரகசியமான விடயமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.குறுகிய அரசியல் கட்சிப் பிரிவினைகள் இன்றி ஜனரஞ்சகமாக செயற்பட எதிர்பார்க்கும் பின்னணியில், நாடாளுமன்ற தேசிய சபை மற்றும் மேற்பார்வைக் குழுக்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பானது தொடர்ந்தும் காணப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தொழில் நிபுணர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.