இநதோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள
இஸ்லாமிய மையப் பெரிய பள்ளிவாசலின் ராட்சத குவிமாடம் தீ விபத்தில் இடிந்து விழும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலில் ஏற்பட்ட தீ விபத்தால், பள்ளிவாசல் தரைமட்டமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
அந்த காணொளியில், தீயில் எரிந்துகொண்டிருந்த பள்ளிவாசலின் கோபுரம் சரிந்துவிழும் காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.