இலங்கைக்கு பாரிய அளவில் ஒத்துழைப்பு வழங்கிய மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் இன்று நம்மை கைவிட்டு விட்டன. இம்முறை ஜெனீவா, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு முஸ்லிம் நாடு கூட இலங்கையை ஆதரிக்கவில்லை. என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தும் கூட அதை கணக்கிலெடுக்காது ஜனாஸாக்களை எரித்தமையினால் தான் அரபு நாடுகள் நம்மை கைவிட்டன. என அவர் மேலும் தெரிவித்தார்.