உண்மையான ஆர்ப்பாட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை, அது வீட்டில் இருந்தே தற்போதைய தலைவரை துரத்தும் என சமகி ஜன பலவேகயா மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆர்ப்பாட்டங்கள் ராஜபக்சக்களை வீட்டிற்கு துரத்துவதை நோக்கமாகக் கொண்டது ஆனால் இனி ஏற்படப்போகும் மக்கள் கிளர்ச்சி வீடுகளில் இருந்து தொடங்கும், அது பெற்றோரால் ஆரம்பமாகும். குழந்தைகளுக்கு பசி தாங்க முடியாததால், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல்
பெற்றோர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்கள் செய்வார்கள்.
பிள்ளைகளுக்காக போராடும் பெற்றோர்களுக்கு மத்தியில் எந்த ஒரு அரசியல் தலைவர்களினாலும் விளையாட முடியாது என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதிக்குள் புதிய ஆர்ப்பாட்டம் தொடங்கும். எனவே ஜனாதிபதிக்கு தேர்தலுக்கு அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.