பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஐ-டா என்ற மனித ரோபோ
உரை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளதுடன் உலகலாவிய ரீதியில் நவீன தொழில்நுட்பத்தின் புரட்சியென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பெண் உருவம் கொண்ட இந்த ரோபோவுக்கு ஐ-டா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தான் உயிருடன் இல்லாவிட்டாலும் கலையை உருவாக்கும் திறன் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ரோபோ கூறியுள்ளது.
சித்திரம் வரைய, கவிதை எழுத முடியும் என்றும் அதற்காக நரம்பியல் ஒழுங்கமைப்பை பயன்படுத்துவதாகக் கூறியுள்ள ரோபோ, அவற்றைப் பற்றி பேச முடிந்தாலும் அகநிலை அனுபவங்கள் இல்லையெனத் தெரிவித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் நவீன மற்றும் சமகால கலையியல் நிபுணரான ஐடன் மெல்லர் என்பவரால் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.