கடுவளை பகுதியைச் சேர்ந்த 9 வயதான சிறுமியொருவர், கடுவளை பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்து முறைபாடொன்றை செய்துள்ளார்.
தனது தந்தையின் இரண்டாவது மனைவி, தன்னை தொடர்ச்சியாக தாக்கி வருவதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கோரி அவர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. இதையடுத்து, சிறுமியிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பொலிஸார், சந்தேகநபராக பெண்ணை கைது செய்துள்ளனர்.