போதைப்பொருள் கடத்தல்காரர்களால் Toffee மற்றும் Chocolate விற்பனை செய்பவர்களை போல வேடமிட்டு போதைப்பொருள்களை பாடசாலைகளுக்கு அருகில் கொண்டு வந்து விற்பனை செய்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை Toffee மற்றும் Chocolate வடிவில் பாடசாலைகளுக்கு கொண்டு வருவது தெரியவந்துள்ளதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
SJB பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொழும்பு மாவட்டத்தில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கிய முன்னோடித் திட்டம் இவ்வருடம் நவம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த முன்னோடித் திட்டம் மதிய உணவு, ஆலோசனை மற்றும் பள்ளி மாணவர்களின் தொழில் வழிகாட்டுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் எனவும் கொழும்பு மாநகர சபையும் (CMC) இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.