உலக்கக்கிண்ண இருபதுக்கு 20 தொடரில் சுப்பர் 12 சுற்றில் இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் இன்று விளையாடுகிறது.
இலங்கை அணி அயர்லாந்து அணியை இன்று ஹோபார்ட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இலங்கை நேரப்படி குறித்த போட்டியானது காலை 9.30 மணிக்கு இடம்பெறுகிறது.
இதேவேளை, இன்று உலகக்கிண்ண தொடரில் மேலும் ஒரு போட்டி இடம்பெறவுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மெல்பர்ன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியானது இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.