உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் ஆறாவது தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக பெத்தும் நிஸ்ஸங்க 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பந்துவீச்சில் கார்த்திக் மெய்யப்பன் ஹெட்ரிக் சாதனையுடன் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இதனையடுத்து, 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரக அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.