உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் 3ஆவது தகுதிகாண் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 42 ஓட்டங்களால் வீழ்த்தி ஸ்கொட்லாந்து அணி அதிர்ச்சி அளித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடு்ப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.