Our Feeds


Wednesday, October 12, 2022

ShortNews Admin

SLPP யின் கட்டுப்பாட்டிலுள்ள அலவ்வ பிரதேச சபையின் பஜ்ஜட் தோற்கடிப்பு!



சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள அலவ்வ பிரதேச சபையின் அடுத்தாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.


நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது, 9 மேலதிக வாக்குகளால் அது தோற்கடிக்கப்பட்டது.

28 உறுப்பினர்களைக் கொண்ட அலவ்வ பிரதேச சபையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.

எனினும் நேற்றைய வாக்கெடுப்பின் போது 18 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவர்களில் 9 பேர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »