எந்தவொரு நேரத்தில் வேண்டுமானாலும், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது. நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியால் நாவலப்பிட்டிய நகரில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் 148 பேர் மாத்திரமே பங்கேற்றனர் எனவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி ஆசனக் கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (16) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மஹிந்தானந்த இவ்வாறு குறிப்பிட்டார்.