சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.தேரர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரர், 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவிற்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.