Our Feeds


Saturday, October 22, 2022

SHAHNI RAMEES

#PHOTOS: வங்கியின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த சொகுசு கார்...!


கஹவத்தை நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் சுவரை

சொகுசு கார் ஒன்று உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதில், எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. குறித்த வங்கி கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வங்கிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வங்கியின் படிக்கட்டுக்கள் ஊடாக முன்னோக்கி சென்று வங்கியினுள் புகுந்துள்ளது.


குறித்த காரை பல் மருத்துவர் ஒருவர் செலுத்திச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்











Subscribe to this Blog via Email :
Previous
Next Post »