நுவரெலியா - வலப்பனை, குருந்துஓயா நீர்வீழ்ச்சி அமைந்துள்ள வனப் பகுதி கற்குழி ஒன்றில் இருந்து இரத்த காயங்களுடன் இருவரின் சடலங்கள் நேற்று (30) மதியம் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் வலப்பனை முலால்கலை பகுதியை சேர்ந்த ஜயசிங்க முதியன்சலாகே அபேசிங்க (வயது 61) மற்றும் வியாபாரியான ஜெயதிலக்க முதியன்சலாகே ருவான் குமார (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
சடலமாக மீட்க்கப்பட்டுள்ள இருவரும் கடந்த (29) ஆம் திகதி அதிகாலை தமது வீட்டை விட்டு சென்றுள்ளனர்.
இவர்கள் அன்றைய தினம் இரவு வரை வீடு திரும்பாத நிலையில் விட்டார்கள் வலப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் (30) ஆம் திகதி காலை வலப்பனையிலிருந்து குருந்து ஓயா நீர் வீழ்ச்சிக்கு செல்லும் வன பகுதியின் வீதியோரத்தில் ஆடைகள் சில கிடைப்பதை கண்டு அப்பகுதிக்கு சென்ற சிலர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வலப்பனை பொலிஸார் மற்றும் ஊர்மக்கள் அங்கு தேடுதலில் ஈடுப்பட்ட போது குழி ஒன்றில் இருவர் இரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதை கண்டுள்ளனர்.
அத்துடன் கூரிய ஆயுதங்கள்,ஜெனரேட்டர் மற்றும் வயர்கள் ,மின் குமிழ்கள் என பல பொருட்களும் அக் குழிக்கு அருகில் இருந்ததையும் கண்டுப்பிடித்துள்ளனர்.
அதேநேரத்தில் உயிரிழந்த இருவரும் புதையல் தோண்டுவதற்காகவே குழிக்குள் சென்றுள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் வலப்பனை மந்திரிதென்ன பாடசாலையின் முன்னால் அதிபரும்,வலப்பனை கோட்ட கல்வி காரியாலயத்தில் பணிப்பாளராக கடமையாற்றிய ஓய்வு பெற்ற ஜே.எம்.அபேசிங்க வயது(61) சடலமாக மீட்கப்பட்டவரில் ஒருவராவார்.
சம்பவத்தில் உயிரிழந்த இருவருக்கு கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதை ஏற்பட்டுள்ளதை அவதானித்த நீதவான் மற்றும் சட்ட வைத்தியர்
நீதவானின் உத்தரவுடன் சடலங்களை பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும்,புதையல் தோண்ட இவர்களுடன் மேலும் பலர் வந்திருக்க கூடும். அவர்கள் யார் என்பது தொடர்பிலும் பல கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.