ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு எனவும்,எனவே இலவசக் கல்வி பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் சாசனம் இன்னும் கூடிய ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
தற்போது,போசாக்கு குறைபாடு காரணமாக சிறுவர்கள் பல கடுமையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி,பிரதமர் பதவிகள் போன்ற வரப்பிரசாதங்கள் எதுவுமின்றி ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சார் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஐக்கிய மக்கள் சக்தி என்பது சம்பிரதாய ரீதியான எதிர்க்கட்சியொன்று அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
தேசத்தின் குழந்தைகளை டிஜிடல் உலகினில் வளமுள்ளவர்களாக உருவாக்குவதே எங்களின் ஒரே இலக்காகும்.அந்த இலக்கை மனதில் கொண்டு "பிரபஞ்சம்" வேலைத்திட்டத்தை நமது எண்ணக்கருவாகக் கொண்டு செயல்படுத்துகிறோம்.அந்த எண்ணக்கருவை முன்னிலைப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பேரூந்துகள் வழங்கப்படுவதோடு,இன்று
கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி"பிரபஞ்சம்"
நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 35 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் ரூபா (ரூ.5,000,000) பெறுமதியான பஸ் வண்டி பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இன்று(01) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.