Our Feeds


Sunday, October 16, 2022

ShortNews Admin

``ஹிஜாப் கூடாது என்றால், இந்திய இஸ்லாமியப் பெண்கள் பிகினி அணிய வேண்டுமா?" - அசாதுதீன் ஒவைசி MP காட்டம்.



``எவ்வளவு பிளவுபடுத்தும் சக்திகள் எங்களை உடைக்க முயன்றாலும், நாங்கள் இந்தியாவைவிட்டு வெளியேற மாட்டோம், நாங்கள் இங்கேயே வாழ்ந்து இறப்போம்.” - அசாதுதீன் ஒவைசி


பா.ஜ.க ஆளுங்கட்சியாக இருக்கும் கர்நாடகா மாநிலத்தில் தொடங்கிய ஹிஜாப் விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பளித்த இந்திய உச்ச நீதிமன்ற அமர்வின் இரு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புகளைச் சொல்ல, இந்த வழக்கு தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மக்களவை எம்.பி-யும், ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவருமான அசாதுதீன் ஒவைசி கலந்துகொண்டு உரையாற்றினார்.


அப்போது, ``இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணியாமல் பிகினி அணிய வேண்டுமா... ஹிஜாப் மற்றும் தாடி போன்ற முஸ்லிம்களின் மதம், கலாசாரம் மற்றும் பாரம்பர்யங்களை ஏன் அழிக்க நினைக்கிறீர்கள்?


பிளவுபடுத்தும் சக்திகள் எங்களை உடைக்க முயன்றாலும், நாங்கள் இந்தியாவைவிட்டு வெளியேற மாட்டோம். நாங்கள் இங்கேயே வாழ்ந்து இறப்போம். இது எங்கள் நாடு. இந்தியாவை இரானுடன் ஒப்பிடுவது தவறானது. ஏனென்றால், அங்கு மதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியலமைப்பு. அதனால் ஹிஜாபுக்கு எதிராக இயக்கம் நடந்துவருகிறது. ஆனால், நமது நாடு ஜனநாயக நாடு. ஹிஜாப் அணிவதும், அணியாததும் இந்திய அரசியலமைப்பின்படி மக்களின் சுதந்திரம். இதைத் தடை செய்வது சுதந்திரத்தை பாதிக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.


இதே வேலை இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் பிரபல இஸ்லாமிய பிரச்சாரகரான பி.ஜெய்னுலாப்தீன் கடந்த வாரம் ஆற்றிய ஜும்ஆ உரையின் போது ஹிஜாப் தடையை ஆதரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளையும் நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்ச்சித்துள்ளதுடன், அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமையில் கைவைக்க யாருக்கும் அனுமதியில்லை என்றும் சாடியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »