Our Feeds


Wednesday, October 26, 2022

ShortNews Admin

அறிமுகமானது LITRO Home Delivery உலகில் எங்கிருந்தும் இனி பெற்றுக்கொள்ள முடியும்!



உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு கொள்கலன்களை பெறுவதை எளிதாக்கும் வகையில் லிட்ரோ நிறுவனம் லிட்ரோ ஹோம் டெலிவரி (‘LITRO Home Delivery’) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, 


இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு அறிக்கையில்,

மொபைல் செயலியின் மூலம், நுகர்வோர் ஒருவர், எந்த வகையான உள்நாட்டு அல்லது தொழில்துறை எரிவாயு கொள்கலனையும் உலகில் எங்கிருந்தும் பெற முடியும்.

நுகர்வோர் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் LITRO எரிவாயுவை கொள்வனவு செய்யலாம்.

கோரிக்கைகளை மேற்கொண்டு, பணம் செலுத்துவதன் மூலம் அவர்கள் இதனை பெற்றுக்கொள்ளமுடியும். அத்துடன் உடனடியான விநியோகத்தையும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

மேம்படுத்தப்பட்ட LITRO Gas மொபைல் செயலியின் ஊடாக நுகர்வோர் உலகில் எங்கிருந்தும் தங்களின் கொடுப்பனவை டொலர் மூலம் செலுத்தலாம் .

மொபைல் செயலியை இப்போது IOS மற்றும் Android இல் பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »