Our Feeds


Saturday, October 29, 2022

Anonymous

பாலியல் உணர்வை தூண்டும் மருந்துகளினால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் l வெளியான அதிர்ச்சி தகவல்

 



பாலியல் ஊக்க மருந்து பாவனையினால் ஏற்படும் உயிரிழப்புகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார்.


இதற்கு பல முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பாலியல் உணர்வை ஊக்கப்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. தரமற்ற மருந்துகளின் பயன்பாடு, தவறான அளவு மற்றும் மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துவதே இந்த உயிரிழப்புக்களுக்கு முக்கியக் காரணமாகும்.”

“20-25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 40-45 வயதிற்குட்பட்டவர்கள் இந்த நிலைமையை எதிர்நோக்குகின்றனர்.”

“பல இளைஞர்கள் இந்த பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்துகளை  பரிசோதனைக்காக அருந்தியுள்ளனர்.”

“மாதமொன்றிற்கு இரண்டு அல்லது மூன்று சம்பவங்கள் பதிவாகின்றன. இது உண்மையில் அதிக எண்ணிக்கை, எனவே நாங்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.” என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »