முன்னாள் ஆளுனர் அஸாத் சாலியின் தேசிய ஐக்கிய முன்னனியின் (NUA) தேசிய அமைப்பாளராக செயல்பட்ட பிரபல சமூக செயல்பாட்டாளர் ஷிராஸ் யூனூஸ் அஸாத் சாலியின் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ராஜினாமா கடிதத்தை அஸாத் சாலிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அஸாத் சாலி, திலினி பிரியமாலியிடம் பல கோடிகளை கொடுத்துள்ள சர்சை வெடித்துள்ள இந்நிலையில் கட்சிக்காக பல ஊர்களுக்கு சென்று கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்த முக்கிய செயல்பாட்டாளரான ஷிராஸ் யூனூஸ் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஷிராஸ் யூனூஸ் அஸாத் சாலிக்கு அனுப்பியுள்ள கடிதம்.