Our Feeds


Tuesday, October 25, 2022

Anonymous

திலினி பிரியமாலி விவகாரம்: மத்திய வங்கியிடம் ஆலோசனை பெற்றுள்ள CID யினர்!

 



(எம்.எப்.எம்.பஸீர்)


செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சிஐடியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலி தொடர்பிலான விசாரணைகளுக்கு மத்திய வங்கி, சிஐடிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் குறித்த விசாரணைகளை மேற்பார்வை செய்யும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திப்பட்டுவெவவின் கீழான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல உள்ளிட்ட குழுவினர் மத்திய வங்கியின் சிறப்புக் குழுவிடம் இது குறித்த ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனம் தொடர்பில் மத்திய வங்கியிம் பிரத்தியேக விசாரணைகளின் முன்னெடுத்துள்ள நிலையிலேயே, இந்த ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

அதன்படி, மோசடி செய்யப்பட்டுள்ளதாக கருதப்படும் பணத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சிஐடி தகவல்கள் தெரிவித்தன.

இதில், சந்தேக நபரான திலினி பிரியமாலி, வேறு நபர்களின் பெயர்கலில் ஏதேனும் வங்கிக் கணக்குகளை பேணினானாரா என்பது குறித்தும் சிஐடியின் அவதானம் திரும்பியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »