நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொடுக்கல் வாங்கள்கள் தொடர்பில் சாட்சிகளை வழங்குவதற்காக அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவுக்குச் சென்றார்.
காணி ஒன்றினை விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற 80 லட்சம் ரூபாவினை குறித்த பெண்ணிடம் முதலீடு செய்ததாக வெளியான தகவல்கள் தொடர்பிலேயே அசாத் சாலி சாட்சியம் வழங்குவதற்கு சென்றார்.
ஜானகி சிறிவர்தன என்ற பெண்ணின் ஊடாகவே 80 லட்சம் ரூபாவினை பெற்றுக்கொடுத்ததாக ஹிரு செய்தி சேவைக்கு அசாத்சாலி தெரிவித்திருந்தார்.
கடந்த 05 ஆம் திகதி கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலி, எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.