நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அதேநேரம் இன்றைய மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.