கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும்
குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் மொத்த விலை 290 ஆக நிலவிய பின்னணியில், தற்போது 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி. கோதுமை மாவின் புதிய மொத்த விற்பனை விலை 265 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மொத்த விற்பனை விலை குறைவடைகின்ற போதும் பல இடங்களில் சில்லறை விலை அதிகரித்த நிலையிலேயே இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.