பிரபல சமூக செயற்பாட்டாளரும், காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவருமான இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால், இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி செயலகம் சுற்றி வளைக்கப்பட்டமை மற்றும் சட்டவிரோத ஒன்று கூடல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் ட்ரூ சிலோனுக்கு கூறினர்.
இதேவேளை, இஸ்மத் மௌலவியிடம் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலமொன்றை பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தருமாறு இஸ்மத் மௌலவிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினால், இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார்.
(நன்றி - TrueCeylon)