இந்த புதிய விலை திருத்தம் இன்று (19) முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விலை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோ பூண்டின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 490 ரூபாவாகும்.
ஒரு கிலோ கோதுமைமா விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 320 ரூபாவாகும்.
ஒரு கிலோ நெத்தலியின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1450 ரூபாவாகும்.
ஒரு கிலோ கடலைப் பருப்பு விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 285 ரூபாவாகும்.
ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 260 ரூபாவாகும்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 169 ரூபாவாகும்.