Our Feeds


Sunday, October 30, 2022

Anonymous

BREAKING: குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்ததால் நூற்றுக்கணக்கானோர் மாயம்: 40 பேர் பலி

 



இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்குபாலம் ஒன்று அறுந்து வீழ்ந்தால் நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் வீழ்ந்தனர். இவர்களில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


குஜராத்தின் மோர்பி நகரில், மச்சு ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த சுமார் நூற்றாண்டு பழமையான தொங்கு பாலமே இவ்வாறு அறுந்துள்ளது.

பூஜையொன்றில் கலந்துக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் தொங்கு பாலம் மீது நடந்து சென்றுகொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த பாலத்தின் மீது சுமார் 400 பேர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலம் அறுந்ததால் நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் வீழ்ந்தனர். குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மீட்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்படி பாலம் புனரமைப்பு நடவடிக்கைளின் பின்னர், 5 நாட்களுக்கு முன்னரே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் மீண்டும் திறக்கப்பட்டது.

அதிக எண்ணிக்கையானோர் பாலத்தில் நின்ற நிலையில் பாரம் தாங்காமல் இப்பாலம் வீழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »