அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம், நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் பதிவாகியுள்ளது.
சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரமே வாக்களித்துள்ளார்.
இதன்படி, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்திற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி ஆதரவு வழங்கியது.
அதேபோன்று, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (