Our Feeds


Thursday, October 20, 2022

ShortNews Admin

#BREAKING: காம்பியா போன்று இந்தோனேஷியாவில் 100 சிறுவர்கள் பலி..!

 

இந்தோனேசியாவில் சிரப் மருந்து பருகியதன் காரணமாக 100 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதனால் அங்கு தற்போது சிரப் மற்றும் திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பருகியதால் அண்மையில் காம்பியாவில் 70 குழந்தைகள் உயிரிழந்தமை காரணமாக இந்த மாத தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பு குறித்த இருமல் மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் இந்தோனேசியா எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில் காம்பியாவிற்கு இருமல் சிரப் வழங்கிய இந்தியாவின் MAIDEN PHARMACEUTICALS LTD பட்டியலில் இந்தோனேசியாவும் உள்ளடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »