நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஏற்றிய 02 கப்பல்களுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல்களில் 40,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மற்றுமொரு கப்பலிலிருந்து 37,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை தரையிறக்கும் நடவடிக்கைகள் நேற்று(03) நிறைவடைந்துள்ளன.
மேலும், விமானங்களுக்கான 11,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து எரிபொருள் தற்போது தரையிறக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.