காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.