இலங்கையின் முதலாவது நீர் மின் நீர்த்தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறி வருகின்றது.
இந்த தானியங்கி வான் கதவுகள் வழியாக இன்று (24) காலை தொடக்கம் நீர் வெளியேறி வருகின்றது.
இந்த நீரானது களனி ஆற்றின் நீர் மட்டத்தை வெகுவாக அதிகரிக்கும் என்பதல் காசல்ரீ நீர்தேக்கத்தின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் கரையில் குடியிருப்பவர்களும் இந்த ஆற்றினை பயன்படுத்துபவர்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என நீர்தேக்கத்தின் கடமை நேர பொறியலாளர் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த பிரதேசத்திற்கு மழைப்பெய்து வருவதனால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அதிகளவான் நீர் விநியோகிக்கப்படுவதால் இந்த தானியங்கி வான் கதவுகள் அவ்வப்போது திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று காலை 8 மணிக்கு மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டுள்ளன.
இதனால் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மவுசாகலை, கெனியோன், லக்ஷபான பொல்பிட்டிய, நவலக்ஷபான, விமலசுரேந்திர, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர்வரத்தும் அதிகரித்துள்ளன.