சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒக்டோபர் முதல் பாதியில் 20
ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டவர்களின் விகிதத்தில் முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, ஒக்டோபர் 01 முதல் 16ஆம் திகதி வரை இலங்கைக்கு மொத்தம் 20,573 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஒக்டோபர் முதல் வாரத்தில் (1-7) இலங்கைக்கு 8,614 பயணிகள் வந்துள்ளனர். இரண்டாவது வாரத்தில் (08-14) 9,125 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். மூன்றாவது வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் (15-16) சுற்றுலாப் பயணிகளின் வருகை 2,834 ஆக இருந்தது.
ஒக்டோபர் மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகமானவர்கள் இந்தியர்களாவர். இது மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகையில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
மொத்த சுற்றுலாப் பயணிகள் தொகையில் ரஷ்யர்கள் இரண்டாவது (14 சதவீதம்) இடத்தைக் கொண்டுள்ளனர்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் மூன்றாவது பெரிய எண்ணிக்கையை (10 சதவீதம்) இங்கிலாந்து நாட்டவர்கள் கொண்டுள்ளனர்.