பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில்
கற்று வந்த மற்றுமொரு மாணவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த மாணவரே காணாமல் போயுள்ளார்.
பல்கலையின் விடுதியிலிருந்து 2ம் திகதி வெளியேறிய குறித்த மாணவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவர் கடவத்தை கணேமுல்ல பகுதியை சேர்ந்த மாணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சில தினங்களுக்கு முன்னதாக கலை பீடத்தில் கற்று வந்த மாணவர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் மகாவலி கங்கையிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.