Our Feeds


Friday, October 21, 2022

RilmiFaleel

புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவு.

வன்முறையாளர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் புனர்வாழ்வு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இந்த சட்டமூலமானது, நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்து கணிப்பு ஆகியவற்றின் பின்னர், சரத்துகளின் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே, அதனை அனுமதிக்க முடியும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்தை பயன்படுத்தி, போராட்டக்காரர்களை நீண்ட காலம் முகாம்களுக்குள் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »