Our Feeds


Friday, October 21, 2022

Anonymous

ராஜபக்க்ஷர்களும் சகாக்களும் அரச நிதியை கொள்ளையடிப்பதை நிறுத்தவில்லை! -பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா..!

 

 

பொருளாதார பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்கள் பட்டினியால் வாடும் நிலையில் கூட ராஜபக்க்ஷர்களும் அவர்களின் சகாக்களும் அரச நிதியை கொள்ளையடிப்பதை தவிர்த்துக் கொள்ளவில்லை. மீண்டும் எழுவோம் என நாட்டை வலம் வருகிறார்கள்.ராஜபக்க்ஷர்கள் நாட்டுக்காகவாவது இனி விலகிக் கொள்ள வேண்டும்.என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்பி தெரிவித்தார்.

போராட்டத்தின் ஊடாக மாத்திரமே ஊழல்வாதிகளை விரட்டியடிக்க முடியும். ஊழலற்ற சிறந்த அரசியல் கட்டமைப்பை உருவாக்க நாட்டு மக்கள் ஒன்றுப்பட வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.



நாடாளுமன்றத்தில் இன்று(20) வியாழக்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் ஒரு சில விடயங்கள் சாதகமானதாக உள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், உட்பட பொதுஜன பெரமுனவின் ஒருசில உறுப்பினர்கள் 22ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை அவதானிக்க முடிகிறது.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர்கள் என்ற ஏற்பாடு 22ஆவது திருத்த வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் .இலங்கைக்கு சேவையாற்ற வேண்டுமாயின் இரட்டை குடியுரிமையை கொண்டிருக்க வேண்டிய தேவை கிடையாது.குறுகிய நோக்கத்துக்காக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முறையற்ற வகையில் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »