சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் இரு விமானங்கள் ஊடாக இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தன.
சீனா நன்கொடையாக வழங்கியுள்ள இந்த மருந்துகளின் பெருமதி 1.8 பில்லியன் ரூபாய் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சீனா 1.2 பில்லியன் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று நாட்டை வந்தடைந்தவற்றில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பலவும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.