பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி
ஒருவரின் மனைவியுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் உட்பட பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் பயணித்த வேனில் இருந்த பெண்ணை விசாரித்தபோது ‘சுது அக்கா’ என அடையாளம் கண்டுள்ளதுடன் குருணாகல் மற்றும் அம்பன்பொல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்வதாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணின் கணவர்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவராவார்.
தனது கணவனை விடுவிப்பதற்காக வேன் ஒன்றையும் குறித்த சார்ஜன்டுக்கு கைதியின் மனைவி முன்னர் பரிசளித்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் நாளை 18ஆம் திகதி வரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.