நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் அடிப்படையான பல மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்து விற்பனை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்து கட்டும் துணி (பண்டேஜ்) மற்றும் பஞ்சு போன்றவை உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தனியார் மருந்தகங்களில் பல மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச மருத்துவமனைகளில் தற்போது மயக்க மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.