கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை
(22) இரவு முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக கொழும்பு 2,3,4,5,7,8,9 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் மறுநாள் (23) நண்பகல் 12.00 மணி வரை நீர்விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.