தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவதற்கான
நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி வார நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரைக் கோபுரத்தை பார்வையிட முடியும்.
அதேபோன்று வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தாமரைக் கோபுரத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.