அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எச்சரிக்கை விடுத்துள்ளது.சட்ட விரோதமான உத்தரவின் பேரில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்றாவது ஒரு நாள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு விலை கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என BASL இன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தங்கள் முதலாளிகளை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறும் பொலிஸ் அதிகாரிகளை நான் பார்த்திருக்கிறேன், அவர்களின் தவறான செயல்களுக்கு விலை கொடுக்க வேண்டியிருந்தது. சிலர் இழப்பீடு மற்றும் பதவி உயர்வுகளை இழந்தனர். சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பின்னர் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
எனவே “நீதியின் சக்கரங்கள் மெதுவாக அரைக்கலாம், ஆனால் அவை நிச்சயமாக அரைக்கும்” என்றும் குறிப்பிட்டார்.