மஹிந்த ராஜபக்ஷ இந்த நிலைக்கு வருவதற்கு காரணம்
நாமல் உள்ளிட்டவர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.முன்னதாக அமைச்சரவையில் மூன்று ராஜபக்சக்கள் மட்டுமே இருந்ததாகவும், இம்முறை அது 5 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெட்கம், பயம் இருந்தால் மூன்றிலேயே அதை வைத்துக்கொள்வார்கள் என்றும் விமல் வீரவன்ச எம்.பி. குறிப்பிட்டார்.
இந்த வரி உயர்வினால் சமூக அமைதியின்மை பல மடங்கு அதிகரிக்கும் என தெரிவித்த விமல் வீரவன்ச, இந்த சமூக அமைதியின்மை ஊடாக மீண்டும் ஒரு கிளர்ச்சியான சமூகப் போக்கு உருவாகலாம் எனவும் தெரிவித்தார்.